விடியோக்களை பதிவேற்றும் சமூக வலைத்தளமான யூடியூப், விடியோக்களுக்கு பதிவாகும் டிஸ்லைக்குகளை மறைக்கும் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
விடியோக்களை உருவாக்கி அதனை யூடியூப்பில் பதிவிடுவோருக்கு வரும் டிஸ்லைக்குகளால், மறைமுகமாக நடத்தப்படும் எதிர்மறை தாக்குதல்களிலிருந்து விடியோ உருவாக்குபவர்களைக் காக்க இந்த திட்டத்தை யூடியூப் செயல்படுத்த உள்ளது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் விடியோ தயாரிப்பாளர்களிடம் கருத்துக் கேட்டுள்ளது யூடியூப். அதாவது விடியோ பிடிக்கவில்லை என்ற பதிவை வெளிக்காட்டாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை யூடியூப் பரீட்சித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு விடியோவுக்குப் பதிவாகும் விருப்பம், விரும்பவில்லை என்ற பதிவுகள், விடியோ தயாரிப்பவரின் பக்கத்தில் காட்டும். ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு விருப்பம் மட்டுமே வைக்கப்படும்.
இவ்வாறு விரும்பவில்லை என்ற வாய்ப்பை அனைவருக்கும் மறைத்துவிடப் போவதில்லை என்றும், ஒரு விடியோ சானலைத் தொடங்குபவர்களுக்கு, ஆரம்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கடக்கவே இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்களின் கருத்துகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். அது முக்கியம் கூட. ஆனால், சில படைப்பாளிகளுக்கு விழும் விரும்பவில்லை என்ற பதிவுகளால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவே இந்த முயற்சி என்றும் யூடியூப் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!

குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


