ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு கட்டுப்பாட்டு அறை: ஹரியாணா முதல்வர்
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் வகையில் சண்டிகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் வகையில் சண்டிகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இதுவரை ஒடிசாவிற்காக 70 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்காக 20 டேங்கர் லாரிகளும் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது.
எனினும் உரிய இடங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கு மேலும் டேங்கர் லாரிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
கரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஒடிசாவில் இன்று (மே 5) முதல் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...