கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கோவாவில் மே 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய அவர், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மே 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகவும், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மற்றும் விலக்குகள் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாகும் என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


