மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 மே 2021, 1:13 pm

DIN

கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,39,656 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 4,38,913 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 97 பேர் பலியானார்கள். கரோனாவிலிருந்து இன்று மட்டும் 33,733 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,05,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,02,443 கண்காணிப்பில் உள்ளனர். 
740 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.