கேரளத்தில் மே 23 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
கேரள மாநிலத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை மே 23ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கேரள மாநிலத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை மே 23ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 8 தேதி கேரளத்தில் 9 நாள்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வர இருந்தநிலையில் அதனை மேலும் நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மே 23 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கேரள அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளித்துள்ளது.
மேலும் கரோனா அதிகம் பாதித்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...