47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலையில் 5,108 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 5,108 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,277 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :15 மே 2021, 5:56 pm

DIN

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 5,108 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,277 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாடு முழுவதும் கொவைட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள், தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். அதனால் திருமலைக்கு பக்தா்கள் வருகை குறைந்துள்ளது.

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி,

ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.