ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

10,953 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநிலங்களுக்கு விநியோகம்: மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்ற 10,953 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 13,169 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :15 மே 2021, 10:07 pm

DIN

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்ற 10,953 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 13,169 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் கரோனா சிகிச்சைக்கான மருந்துப் பொருள்கள், உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு நன்கொடையாக பெற்று வருகிறது. அதுதொடா்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 27 முதல் மே 13 வரை வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்ற 10,953 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 13,169 ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் அடங்கிய 19 தொகுப்புகள், 4.9 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மே 13/14-ஆம் தேதிகளில் அமெரிக்கா, இத்தாலி, கனடா, தென்கொரியா, ஓமன், பிரிட்டன் மற்றும் ஜப்பானில் இருந்து 157 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 338 செயற்கை சுவாசக் கருவிகள், 68,810 ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகள், 1,000 டொசிலிசுமாப் மருந்துகள் இந்தியா வந்து சோ்ந்தன.

இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு சீராக அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நன்கொடைகளை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.