மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு: பினராயி விஜயன்

கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 மே 2021, 4:13 pm

DIN

கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, கடந்த 8-ஆம் தேதி கேரள மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, மே 16 வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமுடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் காணப்படும் பூஞ்சை தொற்று கேரளத்திலும் காணப்படுகின்றன. இதுதொடர்பான மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார். இதனிடையே கேரளத்தை பொறுத்தவரை இன்று ஒரேநாளில் 32,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,680 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,88,208ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனால் இன்று மேலும் 96 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 6,339ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 29,442 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,66,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 4,45,334 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,31,271 பேர் பல்வேறு மாட்டங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.