சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம்

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2021, 11:22 am

DIN

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் 199 மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

மேலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 81.7 சதவிகிதத்திலிருந்து 85.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.8% இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாட்டின் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.