விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிங்கப்பூர் விமான சேவையை உடனடியாக ரத்து செய்க: கேஜரிவால் வேண்டுகோள்

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று  தில்லி முதல்வர் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :18 மே 2021, 11:12 am

DIN

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால் அங்கு மே 28 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சிங்கப்பூரில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்திவைக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வந்த கரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி உருவாக்கப்பட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.