பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வியாழக்கிழமை பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி
Updated on
1 min read

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வியாழக்கிழமை பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பஞ்சாபில் உள்ள முல்தான் நகரிலிருந்து, மாகாண தலைநகரான கராச்சிக்கு பேருந்து சென்றுகொண்டிருந்ததாக மூத்த காவல்துறை ஆணையர் இர்பான் சமோ கூறியுள்ளார். 

ஓட்டுநர் அதிவேகமாக சென்றதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடந்து வருகின்றனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் மாவட்டத்தின் ரோஹ்ரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பெர்வைஸ் அக்தர் தெரிவித்தார். 

இவர் மேலும் தெரிவித்ததாவது, 

விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

காயமடைந்த 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனை அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்து வருவதாகவும் அக்தர் தெரிவித்தார். அவர்களில் சிலர் மாவட்டத்தின் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் முல்தானில் இருந்து வந்தவர்கள். ரம்ஜான் விடுமுறையை வீட்டில் கழித்துவிட்டு, கராச்சியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com