விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு கரோனா தடுப்பூசி:மத்திய அரசு அனுமதி

மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 9:54 pm

DIN

மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அகில இந்திய வாகனப் போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவியதையடுத்து மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. அதையடுத்து, நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. அந்த மருத்துவ ஆக்சிஜனானது வாகனங்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் வாகனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன. அந்த வாகனங்களின் ஓட்டுநா்கள் தொடா்ந்து பணியாற்றி வருவதால், அவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அச்சம் எழுந்தது. அதையடுத்து, ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டுமென அகில இந்திய வாகனப் போக்குவரத்து கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தலைவா் பால் மல்கித் சிங் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கையில், ‘கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆக்சிஜன் வாகன ஓட்டுநா்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்துமாறு மாநில போக்குவரத்துத் துறைகளின் செயலா்களுக்கு வலியுறுத்தியுள்ளது. ஓட்டுநா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கும் அவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மாநில அரசுகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆக்சிஜன் வாகன ஓட்டுநா்களுக்கு தலா ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்குவது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.