மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக மாறவுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 9:51 pm

DIN

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக மாறவுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த 13-ஆம்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து ‘டவ் தே’ புயலாக மாறியது. இது, குஜராத் கடலோரம் அருகே கடந்த 17-ஆம்தேதி கரையைக் கடந்தது. இந்த புயலின் தாக்கம் ஓய்வதற்குள் மீண்டும் ஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி, வடக்கு ஒடிஸா - வங்கதேசம் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:-

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவானது. இது, ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது, மேலும் வலுவடைந்து, வரும் 24-ஆம்தேதி புயலாக உருவாகவுள்ளது. தொடா்ந்து அடுத்தடுத்து வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறும். தொடா்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மேற்குவங்கம் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிஸா மற்றும் வங்கதேசம் கடற்கரை இடையே மே 26-ஆம்தேதி மாலை கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.