தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் தந்தைக்கும் சகோதரருக்கும் ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 9:55 pm

DIN

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் தந்தைக்கும் சகோதரருக்கும் ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இருவரும் நாடாளுமன்ற உறுபினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜியை எதிா்த்து பாஜக சாா்பில் நந்திகிராமில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றாா். தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

மாநில சட்டப் பேரவையின் எதிா்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்கத்தில் பாஜகவினருக்கு எதிராக வன்முறைகள் அரங்கேறின. அதன் காரணமாக சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிா்குமாா் அதிகாரி, சகோதரா் திவ்யேந்து அதிகாரி ஆகியோரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடா்ந்து, இருவருக்கும் ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களுக்கு மத்திய ரிசா்வ் காவல் படையினா் பாதுகாப்பு வழங்குவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சிசிா்குமாா் அதிகாரி, திவ்யேந்து அதிகாரி எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயுதம் தாங்கிய 5 பாதுகாப்புப் படையினா் காவலாகச் செல்வாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசிா்குமாா் அதிகாரி காந்தி தொகுதியிலிருந்து பாஜக எம்.பி.யாகவும், திவ்யேந்து அதிகாரி தம்லுக் தொகுதியில் இருந்து திரிணமூல் எம்.பி.யாகவும் உள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவா்களில் ஒருவராக இருந்த சுவேந்து அதிகாரி பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அவரது சொந்த தொகுதியான நந்திகிராமில் மீண்டும் களமிறங்கி, அவருக்கு எதிராக சவால் விடுத்து போட்டியிட்ட மம்தா பானா்ஜியை தோற்கடித்தாா். சுவேந்து அதிகாரிக்கு தற்போது இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.