எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிகாரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பிகார் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

News image
Updated On :24 மே 2021, 9:50 am

DIN

பிகார் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

மே 25-ம் தேதி வரை முழு முடக்கம் விதிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் குறையாததால் தற்போது ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் 25-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

இதனை தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். உணவகங்களில் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் சேவைக்கும், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.