3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

18-44 வயதினர் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

18-44 வயதினரில் இதுவரை 1.06 கோடி பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

News image

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

Updated On :24 மே 2021, 12:58 pm

DIN


18-44 வயதினரில் இதுவரை 1.06 கோடி பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 19.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியது:

"கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. மே 3-ம் தேதி 81.7 சதவிகிதமாக இருந்த குணமடைவோர் விகிதம் இன்று 88.7 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 11 மாநிலங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கைகளைக் காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கைகளே அதிகமாக இருந்து வருகிறது. 

கடந்த 22 நாள்களாக நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மற்றொரு நற்செய்தி இந்த வாரத்துக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.09 சதவிகிதம். இதுவும் குறைந்து வருகிறது" என்றார் லவ் அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.