பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

30 நாள்களில் 30 நகரங்களுக்கு கோவேக்சின் விநியோகம்

​கோவேக்சின் தடுப்பூசி 30 நாள்களில் 30 நகரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அலுவலர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :25 மே 2021, 11:24 am

DIN


கோவேக்சின் தடுப்பூசி 30 நாள்களில் 30 நகரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அலுவலர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா இதனை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

30 நகரங்களில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவைக்கு கோவேக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை தனியார் மருத்துவமனை பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

முன்னதாக, மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி நேரடியாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.