விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா பரிசோதனை மையங்களுக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

கர்நாடகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதித்த 40 மையங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். 

News image
அஷ்வத் நாராயண் (கோப்புப்படம்)
Updated On :25 மே 2021, 9:24 am

DIN

கர்நாடகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதித்த 40 மையங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஷ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 10,103 பேரின் கரோனா மாதிரிகளுக்கான முடிவுகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படவில்லை.

அந்த பரிசோதனை மையங்களுக்கு ஒரு நபருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.20,20,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே, தனிபட்ட நபர்களுக்கு கரோனா முடிவுகளைக் கூறிய 5 கரோனா பரிசோதனை மையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா கட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.