ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.: 20 பேருக்கு கரோனா 2-ம் தவணை தடுப்பூசி மாற்றிப் போட்ட பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2021, 1:00 pm

PTI


சித்தார்த்நகர்: சுகாதாரத் துறையின் கவனக்குறைவு காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கிராம மக்கள் சிலருக்கு மே 14-ஆம் தேதி பர்ஹ்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அவர்களில் 20 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் தவணையாக கோவாக்சின் போடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மாற்றி போடப்பட்ட அனைவரும் நலமாக இருப்பதாகவும், யாருக்கும் இதுவரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை, அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.