தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தாவிடில் பல அலைகள் தாக்கும்: ராகுல் எச்சரிக்கை
தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தாவிடில் இந்தியாவை பல அலைகள் தாக்கும் என ராகுல் காந்தி எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதுதில்லி: தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தாவிடில் இந்தியாவை பல அலைகள் தாக்கும் என ராகுல் காந்தி எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கணொலி வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், கரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை. கரோனா 2-ஆலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன். ஆனால், எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டது.
கரோனா நோய்தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்ட போகிறது. தொற்றின் தாக்கத்தை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை. முதல் அலையின் போது யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டாவது அலைக்கு மோடியே காரணம். மோடி நிகழ்ச்சி நடத்தும் மேலாளராக மட்டுமே செயல்படுகிறார்.
எங்களுக்கு உத்திகள் மட்டுமே தேவை. நாட்டில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உண்மையில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது. மத்திய அரசு உண்மையை வெளியிட வேண்டும்.
தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு. நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பொது முடக்கம், தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவை தற்காலிக தீர்வுகளாக மட்டுமே இருக்கும். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை பிரதமர் எடுக்க வேண்டும்.
நாட்டில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 3 சதவீதம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் தலைநகராக உள்ள நாட்டில் இன்னும் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
தடுப்பூசி திட்டங்களுக்கு தீர்வு காணவில்லை என்றால் நாட்டில் பல அலைகள் தாக்கும். அதற்கு முன்பாக மோடி அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...