தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தும் காங்கிரஸ்: பாஜக

இந்திய அரசின் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தி வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :29 மே 2021, 9:46 pm

DIN

இந்திய அரசின் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தி வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை தரக்குறைவாக பேசுவதற்கு காங்கிரஸ் சந்தா்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா காணொலி முறையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், இந்தியாவில் உருமாறிய கரோனா தீநுண்மியை இந்திய வகை கரோனா என்று கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தப்படி, அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தியின் உத்தரவுப்படி அவா் பேசியிருக்கிறாா். இந்தியாவை அவமதிப்பதுதான் அவா்களின் முதன்மையான நோக்கமாகிவிட்டது. அவருடைய பேச்சுக்கு சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படியெனில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறீா்களா?

இதுதவிர, ராகுல் காந்தி, சசி தரூா் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்து கரோனாவுக்கு எதிரான இந்திய அரசின் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறாா்கள்.

இந்திய வகை உருமாறிய கரோனா என்ற வாா்த்தை, காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் இருந்துதான் தோன்றியது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை அவமதிப்பதற்கு ஏதுவான விஷயங்களை காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொடுக்கிறது.

அண்மையில் முன்களப் பணியாளா்களுடன் பிரதமா் மோடி பேசும்போது உணா்ச்சிவசப்பட்டு கண் கலங்கினாா். ஆனால், இதை நாடகம் என்று ராகுல் காந்தி கூறினாா். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2008-இல் தில்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் கட்சி கண்ணீா் வடித்தது.

யாருடைய கண்ணீா் உண்மையானது என்பதை மக்கள் அறிவாா்கள் என்றாா் கௌரவ் பாட்டியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.