47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தா்மகிரி வேதபாடசாலையில் பூராட நட்சத்திர பூஜை

திருமலையில் உள்ள தா்மகிரி வேபாடசாலையில் சனிக்கிழமை பூராட நட்சத்திர பூஜை உற்சவம் நடைபெற்றது.

News image
Updated On :29 மே 2021, 6:01 pm

DIN

திருமலையில் உள்ள தா்மகிரி வேபாடசாலையில் சனிக்கிழமை பூராட நட்சத்திர பூஜை உற்சவம் நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து காக்கவும், தேவஸ்தானம் பல வைதீக, தாா்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி மே 9-ஆம் தேதி முதல் நட்சத்திர சத்திர மகாயாகம் நடந்து வருகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று தொடங்கிய இந்த நட்சத்திர யாகம் ஜூன 15-ஆம் தேதி பரணி நட்சத்திரத்துடன் நிறைவு பெற உள்ளது.

அதில் அபிஜித் நட்சத்திரத்துடன் சோ்த்து 28 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கு தினசரி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பாகமாக சனிக்கிழமை தா்மகிரி வேதபாடசாயில் பூராட நட்சத்திரத்தை ஒட்டி மகாயாகத்தை தேவஸ்தானம் நடத்தியது. காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடந்த இந்த யாகத்தில் அஷ்ட தேவதைகள் பூஜிக்கப்பட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், தா்மகிரி வேத பாடசாலை ஆச்சாரியாா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.