கரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை மாநிலங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
நாட்டில் ரெம்டெசிவிரின் உற்பத்தி அதிகரித்து, தேவைக்கும் அதிகமாக அந்த மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சரான மாண்டவியா, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி குறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்டார். அதில் அவர் மேலும் கூறியிருந்ததாவது:
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ரெம்டெசிவிர் உற்பத்தி 33,000 குப்பிகளாக இருந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படவே, பிரதமர் மோடி இதில் சிறப்பு கவனம் செலுத்தியதன் விளைவாக தற்போது நாள் ஒன்றுக்கு 3,50,000 குப்பிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முன்னதாக ரெம்டெசிவிர் உற்பத்தி இருபது மருந்து ஆலைகளில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அந்த எண்ணிக்கை 60 ஆலைகளாக அதிகரிக்கப்பட்டு உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவையும் கடந்த வகையில் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே மாநிலங்களுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருந்தின் இருப்பை கண்காணிக்க தேசிய மருந்துகள் விலை நிர்ணய நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் ரெம்டெசிவிர் விநியோகத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.
அவசரத் தேவைகளை உத்தேசித்து 50 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைத்து பாராமரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என அமைச்சர் மாண்டவியா அதில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஏற்கனவே கடந்த ஏப்ரல் முதல் வாரம் முதல் ரெம்டெசிவிர் ஏற்றுமதியை தடைசெய்ததோடு, ரெம்டெசிவிர் மருந்தின் மூலப்பொருள்கள் இறக்குமதிக்கான சுங்க வரியையும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பருவத்தே பயிர்செய்...

பிஞ்சுக் கைவண்ணம்

தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்? வயது வாரியான வாக்காளர் விவரம்

கண்டுபிடி கண்ணே!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

