பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வங்கதேசத்தில் ஜூன் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஜூன் 6-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

வங்கதேசத்தில் ஜூன் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :31 மே 2021, 7:10 am

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஜூன் 6-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை நிகழ்ந்து வருகின்றது. பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, வங்கதேசத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி அமைச்சரவை பிரிவு ஞாயிற்றுக்கிழமை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக  நாடு தழுவிய பொதுமுடக்கம் மே 24 முதல் மே 30 வரை நீட்டித்தது, ஆனால் நீண்ட பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை கடந்த மாத தொடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டன.

சமீப நாட்களாக புதிய வழக்குகள் மற்றும் இறப்புக்கள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின்படி ஞாயிற்றுக்கிழமை 1,444 புதிய வழக்குகள் மற்றும் 34 இறப்புகள் பதிவாகியுள்ளது, இது ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 798,830 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 12,583 ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.