பாட்னா: பிகாரில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 8 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், தொழில்கள் தொடர்பாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர்களை உள்ளடக்கிய மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் இன்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 8 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்படும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்வதாக நிதிஷ் குமார் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மே 5 - 15 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மே 25 வரை நீட்டிக்கப்பட்டது. பின் மீண்டும், ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


