பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறைச்சாலையே பாதுகாப்பானது: பரோலில் செல்ல மறுக்கும் சிறைக்கைதிகள்

சிறையிலிருந்து வெளியேற ஒரு சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 சிறைக்கைதிகள், சிறைச்சாலையே பாதுகாப்பாக இருப்பதாகவும் பரோல் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News image

சிறைச்சாலையே பாதுகாப்பானது: பரோலில் செல்ல மறுக்கும் சிறைக்கைதிகள்

Updated On :31 மே 2021, 6:46 am


லக்னௌ: சிறையிலிருந்து வெளியேற ஒரு சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 சிறைக்கைதிகள், சிறைச்சாலையே பாதுகாப்பாக இருப்பதாகவும் பரோல் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையே தங்களுக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பரோல் வேண்டாம் என்றும் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஒரே ஒரு சிறைச்சாலையில் இருந்தல்ல, சுமார் 9 சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

இது குறித்து சிறை நிர்வாகம் கூறுகையில், தற்போது 90 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டால், இது அவர்களது தண்டனைக் காலம் நிறைவடைவதை அதிகரிக்கச் செய்யும். எனவே பல கைதிகள் பரோலை விரும்பவில்லை.

அது மட்டுமில்லை, இப்போது அவர்கள் வெளியே சென்றால் உணவு கூட கிடைக்காது. இங்கிருக்கும் மருத்துவ வசதிகளும் கிடைக்காது. அதுதான் பரோலை விரும்பாததற்குக் காரணம் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.