கர்நாடகத்தில் 1,250 பேருக்கு கருப்புப் பூஞ்சை
கர்நாடகத்தில் மொத்தம் 1,250 பேருக்கு கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கர்நாடகத்தில் மொத்தம் 1,250 பேருக்கு கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"மொத்தம் 1,250 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,193 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதனிடையே கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சதானந்த கௌடா கூறுகையில், "கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுக்கான மருந்துக்காக 8-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சந்தையில் 80,000 குப்பிகள் உள்ளன. இதுவரை 8 முதல் 10 ஆயிரம் குப்பிகள் வரை கர்நாடகத்துக்குக் கிடைத்துள்ளன" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...