உபி: ஜிகா வைரஸ் பரிசோதனைகள் தீவிரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  ஜிகா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தீவிரப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
உபி: ஜிகா வைரஸ் பரிசோதனைகள் தீவிரம்
உபி: ஜிகா வைரஸ் பரிசோதனைகள் தீவிரம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  ஜிகா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தீவிரப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த அக். 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின் அடுத்தடுத்து அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அம்மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்திருந்த நிலையில் தற்போது ஜிகா வைரஸின் தாக்கம் ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில் கான்பூர் பகுதியில் அதிகப்படியான காய்ச்சல் , உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை  செய்ய சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் ஜிகா பாதிக்கப்பட்டவரகளுடன் தொடர்பிலிருந்த , பணியாற்றியவர்கள்  என 700 பேருக்கு மேல் ரத்த மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் வீடுகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால் மேலும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com