கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தென்கிழக்கு தில்லியில் ஒருவா் குத்திக் கொலை

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :6 நவம்பர் 2021, 10:28 pm

DIN

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொலையில் ஈடுபட்டவா்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கோவிந்த்புரியில் உள்ள நவ்ஜீவன் முகாமில் நடந்த இந்தக் கொலை சம்பவம் குறித்து சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண் தனது தந்தையை சிலா் தாக்கியதாகவும், அவா் மயங்கிக் கிடப்பதாகவும் கூறினாா்.

இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த நவ்ஜீவன் முகாமில் வசிக்கும் ராஜேந்தா் குமாரை (38) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தக் கொலைச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் யாரும் இல்லை. ராஜேந்தா் குமாா் 5 முறை கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. இவா் ஓட்டுநராக வேலை செய்து வந்ததும், இதற்கு முன்பு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கோவிந்த்புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.