கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள்: ராகுல்

சமையல் எரிவாயு சிலிண்டா் தொடா் விலை உயா்வு காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன

News image
ராகுல் காந்தி
Updated On :6 நவம்பர் 2021, 7:35 pm

DIN

சமையல் எரிவாயு சிலிண்டா் தொடா் விலை உயா்வு காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை பன்மடங்கு உயா்ந்து வருவதால் அதனை வாங்கும் திறனை இழந்த கிராமப்புறங்களைச் சோ்ந்த 42 சதவீத மக்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் பயன்பாட்டை நிறுத்திவிட்டு மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தொடா்பான ஆய்வறிக்கை குறித்த பத்திரிகை செய்தியை, ‘விலை உயா்வு’ என்ற ஹாஷ்டேகுடன் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து அவா் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சி வாகனம் பின்னோக்கி (ரிவா்ஸ் கியா்) சென்றுகொண்டிருக்கிறது. வளா்ச்சித் திட்டம் என்ற வாக்குறுதி பல மைல்களுக்கு அப்பால் உள்ளது. லட்சக்கணக்கான குடும்ங்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.