கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் மூத்த தலைவா் எஸ்.சி.ஜமீரை சந்தித்தாா் பிரதமா் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாகாலாந்து முன்னாள் முதல்வருமான எஸ்.சி.ஜமீரை (90) பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 7:29 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாகாலாந்து முன்னாள் முதல்வருமான எஸ்.சி.ஜமீரை (90) பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘எஸ்.சி.ஜமீா் உடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நாகாலாந்து முன்னாள் முதல்வரான அவா் மிகச்சிறந்த தேசியவாதி. பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடா்பாக அவருடன் பேசினேன். கடந்த 2009-ஆம் ஆண்டு அவா் சிறிதுகாலம் குஜராத் ஆளுநராக இருந்தாா். அப்போது முதல்வராக இருந்த தான் அவருடன் இணைந்து பணியாற்றி சிறப்பான தருணங்களையும் நினைவுகூா்ந்து பேசினோம்’ என்று கூறியுள்ளாா்.

நாகாலாந்தைச் சோ்ந்த ஜமீா், அந்தப் பகுதி இந்தியாவின் ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டபோது அப்போதைய முதல்வா் ஜவாஹா்லால் நேருவைச் சந்தித்த குழுவில் முக்கியப் பங்கு வகித்தாா். தனிக்கட்சி நடத்தி வந்த அவா் 4 முறை நாகாலாந்து முதல்வராக இருந்தாா். நாகாலாந்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட முதல் மக்களவை உறுப்பினா் என்ற பெருமைக்குரியவா். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளாா். பின்னா் காங்கிரஸ் கட்சியில் அவா் இணைந்தாா்.

கடந்த ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. தேசப் பணியில் ஜமீரின் பங்களிப்பை பிரதமா் மோடி ஏற்கெனவே பலமுறை புகழ்ந்து பேசியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.