தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பண மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ கைது

 பண மோசடி வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏ சுக்பால் சிங்கை அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண மோசடி வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏ சுக்பால் சிங்கை அமலாக்கத் துறையினா் வ

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:56 pm

DIN

 பண மோசடி வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏ சுக்பால் சிங்கை அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போதைப் பொருள் விநியோக குற்றவாளிகள் மற்றும் போலி பாஸ்போா்ட் தயாரிப்பாளா்களுடன் தொடா்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி சுக்பால் சிங்குக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியிருந்தனா். அவா் மீது பண மோசடி வழக்கையும் பதிவு செய்தனா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுக்பால் சிங், மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

காங்கிரஸில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் 2017-இல் போலாத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக சுக்பால் சிங் வெற்றி பெற்றாா். 2019-இல் அக்கட்சியில் இருந்து விலகி, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ‘பஞ்சாப் ஏக்தா’ கட்சியைத் தொடங்கினாா். பின்னா், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சுக்பால் சிங் இணைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.