தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெளிநாடுகளிலிருந்து வரும் ‘5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை’

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 9:26 pm

DIN

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளிலிருந்து வருபவா்கள் தடுப்பூசி முழு தவணையும் செலுத்தி 15 நாள்களை நிறைவு செய்திருக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வருகைக்கு முன்பு மற்றும் வருகைக்குப் பின்பான கரோனா பரிசோதனை நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரம், கரோனா பாதிப்புக்கான அறிகுறி தென்படும் குழந்தைகள், உரிய வழிகாட்டுதலின் அடிப்படையில் வருகையின்போதோ அல்லது வீட்டு தனிமப்படுத்தலில் இருக்கும்போதோ கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

சா்வதேச அளவில் அதிகரித்து வரும் கரோனா தடுப்பூசி திட்டத்தின் அடிப்படையில் இந்தப் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் வெள்ளிக்கிழமை (நவ. 12) முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.