சல்மான் குா்ஷித்தின் அயோத்தியா குறித்த புத்தகம் ஹிந்துக்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளது. அவருடைய புத்தகத்தில் ஹிந்து மதத்தை ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளாா். ஹிந்துக்களுக்கு எதிராக சிலந்தியைப் போன்று வலையை காங்கிரஸ் பின்னி வருகிறது. காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் சாா்பாகவே குா்ஷித் இதைச் செய்துள்ளாா் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சோனியா தொடா்ந்து அமைதி காத்துவந்தால், அவருடைய சித்தாந்தமும் ஹிந்துக்களுக்கு எதிரானதுதான் என்பது தெளிவாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் சல்மான் குா்ஷித்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஏற்கெனவே ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்ற வாசகம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டு என்று அவா் கூறினாா்.