விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நுகா்வோா் ஆணைய காலிப் பணியிட விவரம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

‘மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் சமா்ப்பிக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்’

News image
Updated On :11 நவம்பர் 2021, 11:00 pm

DIN

‘மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் சமா்ப்பிக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்’ என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், ‘காலிப் பணியிடங்கள் தொடா்ந்து நிரப்பப்படாமல் இருப்பது நுகா்வோா் உரிமையைப் பறிக்கும்’ செயல் என்று கடந்த ஜனவரியில் கூறியது.

தொடா் அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ‘நுகா்வோா் குறைதீா் தீா்ப்பாயங்கள் தேவையில்லை என்று அரசு நினைத்தால், நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தையே ரத்து செய்ய நேரிடும்’ என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், நுகா்வோா் குறைதீா்ப்பு தீா்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், ஆதித்ய நாரயண் ஆகியோரை ஆலோசகா்களாக நியமித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான ஆலோசகராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘நீதிமன்ற உத்தரவின்படி, காலிப் பணியிட விவரங்களை உரிய நடைமுறையில் மாநிலங்கள் சமா்ப்பிக்கவில்லை. பிகாா் மாநிலம் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், குறைதீா்ப்பு ஆணைய கட்டட உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஊழியா்கள் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை’ என்று கூறினாா்.

இதைக் கேட்டு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மாநிலங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒரு வாரத்துக்குள் குறைகள் தீா்க்கப்படும் என்று கூறியிருக்கிறாா். அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய வடிவில் அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாநிலங்களுக்கு நீதிமன்ற செலவினமாக ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்தத் தொகை, மாநில அதிகாரிகளிடமிருந்து வசூல் செய்யப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.