தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சோனியா காந்தியுடன் ராஜஸ்தான் முதல்வா் சந்திப்பு: அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் தில்லியில் சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:51 pm

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் தில்லியில் சந்தித்துப் பேசினாா். ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்து இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில மேலிடப் பொறுப்பாளா் அஜய் மக்கான் ஆகியோா் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதை முழுமையாக அமல்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ராஜஸ்தான் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததையடுத்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபிலும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில் மட்டும் வரி குறைக்கப்படவில்லை.

அதே நேரத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கூறி பிரதமா் நரேந்திர மோடிக்கு அசோக் கெலாட் கடிதம் எழுதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.