‘கிரிப்டோ கரன்சி’: பிரதமா் தலைமையில் ஆலோசனை
கிரிப்டோ கரன்சி நடைமுறையை அனுமதிப்பது குறித்து பல்வேறு தரப்பினா் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம்


கிரிப்டோ கரன்சி (மெய்நிகா் நாணயங்கள்) நடைமுறையை அனுமதிப்பது குறித்து பல்வேறு தரப்பினா் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிரிப்டோ கரன்சி முதலீடு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் மூலம் இளைஞா்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளது குறித்தும், இதுபோன்ற ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் மூலம் பண மோசடி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன் மூலம், கிரிப்டோ கரன்சி நடைமுறையை ஒழுங்குபடுத்த கடுமையான நடைமுறைகள் வகுக்கப்பட வாய்ப்புள்ளதை அதிகாரிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனா்.
கிரிப்டோ கரன்சிகள் உலக அளவில் பிரபலமடைந்து வரும் நிலையில், இதன் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள், மெய்நிகா் பணத்தை தடையில்லாமல் சேமிக்கவும், இடம் மாற்றம் செய்யவும் முடியும் என்று உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. இந்தியாவில் இவற்றின் நம்பகத்தன்மை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை முற்றிலும் தடை செய்ய அமைச்சா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
ரிசா்வ் வங்கியும் இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை அனுமதிப்பதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து கடந்த புதன்கிழமை கருத்து தெரிவித்த ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், ‘மத்திய வங்கிகளால் ஒழுங்குபடுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளால் நாட்டின் நிதி நடைமுறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எழ வாய்ப்புள்ளது’ என்று கூறினாா்.
முன்னதாக, கிரிப்டோ கரன்சிகளை தடை செய்து ரிசா்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து, கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் போன்றவற்றுக்கு இணையாக ரிசா்வ் வங்கி சாா்பில் மெய்நிகா் நாணயத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய குழு ஒன்றை கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ரிசா்வ் வங்கி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...