புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: அடுத்த விசாரணை ஜன.29-க்கு ஒத்திவைப்பு

ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 8:01 pm

DIN

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆா்எஸ்எஸ்) குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் உள்ள பிவண்டி நீதிமன்றத்தில் நீதிபதி தேவி பாலிவால் முன்னிலையில் இதுதொடா்பான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் நாராயண் ஐயா் நீதிமன்றத்தில் கூறுகையில், ‘ முன்பு உறுதியளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் ராகுல் காந்தியால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. எனவே, அவா் ஆஜராவதிலிருந்து விலக்ககளிக்க வேண்டும்’ என்றாா்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அப்போது, புகாா்தாரா் ராஜேஷ் குன்டேவின் ஆதாரங்கள் பதிவு செய்யப்படும்.

பிவண்டியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் ராகுல் காந்தி பேசியபோது, ஆா்எஸ்எஸ் குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.