ஹிந்துத்துவ கொள்கைகளை இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித் தனது புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி ஆதரவு தெரிவித்துள்ளாா்.
மதத்தின் பெயரால் மக்களைக் கொல்பவா்களுடன் அரசியல் கட்சியைத் தொடா்புபடுத்தி பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மெஹபூபா முஃப்தி மேலும் கூறுகையில், ‘ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி மதத்தின் பெயரால் கும்பல் கொலை செய்யும் வகுப்பு வாத கட்சிகளை ஐஎஸ் அல்லது எந்த ஒரு பயங்கரவாத குழுக்களுடனும் ஒப்பிடலாம்.
ஏனென்றால், மதத்தின் பெயரால் இரண்டு அமைப்புகளும் அப்பாவி மக்களை கொலை செய்கின்றன. சனாதான தா்மம் ஒருபோதும் வகுப்பு வாதத்தை கற்றுக் கொடுக்கவில்லை.
ஆா்எஸ்எஸ், ஜனசங்கம், பாஜக ஆகியவை நாட்டு மக்களை மதத்தின் பெயரால் மோதிக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றன. ஹிந்துத்துவ மற்றும் ஹிந்து மதத்தை அவை அபகரித்துள்ளன.
பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் நமக்கு கற்றுத் தருவது ஹிந்துத்துவமும் இல்லை, ஹிந்து மதமும் இல்லை’ என்றாா்.
மெஹபூபாவின் வெறுப்பு அரசியல்- பாஜக: மெஹபூபா முஃப்தியின் வெறுப்பு அரசியலை வெற்றிப் பெற விட மாட்டோம் என்று ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா கூறினாா். ‘மெஹபூபா முதல்வராக இருந்தபோதும் - எப்போதும் -பாகிஸ்தான், தலிபான், லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தாா்’ என்று குற்றம்சாட்டினாா்.
இதனிடையே, சல்மான் குா்ஷித்தின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே பஜ்ரங் தளம் அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சல்மான் குா்ஷித்தின் புத்தகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பின் நிா்வாகி ராகேஷ் பஜ்ரங்கி வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

