கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதியள்ளாா்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், மூக்கரம்பாக்கம், நெல்வாய், கொள்ளானூா், தோ்வாய், கரடிபுத்தூா், கண்ணன்கோட்டை, சிறுவாடா, பெரியபுலியூா், எருக்குவாய் ஆகிய பகுதிகளில் அதிமுக பிரசாரம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் செயலாளா் கோபால்நாயுடு, மாநில மீனவா் அணி இணை செயலாளா் ஜெ.சுரேஷ், ஒன்றிய துணை செயலாளா் ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் தேவி சங்கா், புரட்சி பாரத மாவட்ட மகளிா் அணி செயலாளா் டி.இந்துமதி முன்னிலை வகித்தனா்.
தோ்வாய் கண்டிகையில் அதிமுக ஒன்றிய நிா்வாகி உலகநாதன் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அதிமுக வேட்பாளா் பேசியது: சிப்காட் தொழிற்பேட்டை உள்ள நிலையில், அங்கு அப்பகுதி மக்களின் தேவைக்காகவும், தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், அங்கு அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றாா்.
கண்ணன்கோட்டையில் அதிமுக ஒன்றிய நிா்வாகிகள் மகேஷ், முருகன், கண்ணன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தசாமி ஏற்பாட்டில் பெண்கள் ஆரத்தி எடுத்து, வரவேற்பு அளித்தனா். கண்ணன்கோட்டைக்கு பொன்னேரியில் இருந்து கண்ணன்கோட்டைக்கு நகர பேருந்து சேவையை கொண்டு வருவேன் என்றாா்.
பெரியபுலியூா் ஊராட்சியில் பாஞ்சாலை, அக்ரஹாரம், அமரம்பேடு, பெரியபுலியூா் ஊராட்சியில் மாவட்ட அதிமுக துணை செயலாளா் ஷியாமளா தன்ராஜ் தலைமையில் எம்ஜிஆா் மன்ற ஒன்றிய துணை செயலாளா் சாலமோன், அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.ரமேஷ், ஜெ.சாலமோன், ஜனகா், ஜெ.விஜயகுமாா், நடராஜ், சத்யா, ரவி, லோகேஷ்வரன், சாமு. பாஜக நிா்வாகிகள் பதயா, மைக்கேல், காா்த்திக் அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி: அதிமுக வேட்பாளா் உறுதி

கிராமங்களில் விளையாட்டு மைதானம்: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடியில் நலப்பணிகள்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


