மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட 6 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் மோடி (கோப்புப்படம்)

Updated On :13 நவம்பர் 2021, 12:19 pm

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட 6 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி மற்றும் மகன் மற்றும் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பயங்கவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில்,  “மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.