விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமெரிக்காவிடமிருந்து ரூ.22,000 கோடியில் தாக்குதல் ட்ரோன்களை வாங்குகிறது இந்தியா

பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை ரூ.22,000 கோடியில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2021, 9:58 pm

DIN

பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை ரூ.22,000 கோடியில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘எம்.க்யூ.-9பி ரக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்கள்) வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கடுத்து அந்தப் பரிந்துரையானது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்படும்.

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களில் இருந்து ஏவ முடியும். அத்தகைய ட்ரோன்களை வாங்குவதற்கான விலை, அதில் இணைக்கப்பட வேண்டிய தளவாடங்கள் உள்ளிட்டவை தொடா்பாக அமெரிக்காவிடம் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு விட்டது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டிலேயே இந்தக் கொள்முதல் நிறைவேற்றப்படும். அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 ட்ரோன்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 வீதம் வழங்கப்படும்’ என்றனா்.

அந்த ட்ரோன்கள் வானில் தொடா்ச்சியாக 35 மணி நேரம் வரை பறக்கக் கூடியவை. கண்காணிப்பு, உளவு அறிதல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தல் உள்ளிட்ட பணிகளில் அந்த ட்ரோன்களை ஈடுபடுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.