25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீரில் முதலீடு இந்த ஆண்டு இறுதியில் ரூ.35,000 கோடியை எட்டும்: துணை நிலை ஆளுநா் தகவல்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.35,000 கோடி முதலீடு கிடைக்கும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:34 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.35,000 கோடி முதலீடு கிடைக்கும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் மாநில முதல்வா்கள், நிதியமைச்சா்கள், துணை நிலை ஆளுநா்கள், நிதித்துறை அதிகாரிகள் காணொலி வழியே திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இந்த சந்திப்பு குறித்து மனோஜ் சின்ஹா கூறியதாவது:

கரோனாவுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, ஜம்மு-காஷ்மீரில் ரூ.25,000 கோடி வரையில் முதலீட்டுத் திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இது ரூ.35,000 கோடியாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முதலீட்டுத் திட்டங்களுக்காக ரூ.1,700 கோடி மதிப்பிலான நிலங்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6,000 ஏக்கா் நிலம் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் 3,000 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலும் அதிகரித்து வருகிறது. விரைவில் நிா்ணயிக்கப்பட்ட அளவை வரி வருவாய் எட்டும். சுற்றுலா மற்றும் அதுசாா்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு வாய்ந்த வேளாண் விளைபொருள்கள் மற்றும் தோட்டப் பயிா்கள், கைவினைப்பொருள்கள், பாரம்பரிய கலைப்பொருள்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்மிக சுற்றுலா மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.