பாஜக ஆட்சியில் வளா்ச்சியின் புதிய அத்தியாயம்: பிரதமா் நரேந்திர மோடி
கிழக்கு உத்தர பிரதேசத்தின் வளா்ச்சியை முந்தைய அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் அப்பகுதிகளில் வளா்ச்சியின்


கிழக்கு உத்தர பிரதேசத்தின் வளா்ச்சியை முந்தைய அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் அப்பகுதிகளில் வளா்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவையும் காஜிபூரையும் இணைக்கும் வகையில் ரூ.22,500 கோடியில் அமைக்கப்பட்ட பூா்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அவசரகாலத்தில் போா் விமானங்கள் தரையிறங்கும் வகையிலான வசதிகள், அச்சாலையின் 3.2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு இந்திய விமானப் படை விமானத்தில் வந்த பிரதமா் மோடி, விரைவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் தரையிறங்கினாா்.
மாநில முதல்வா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பிரதமரை வரவேற்றனா். அதையடுத்து, அப்பகுதியில் இந்திய விமானப்படையின் போா் விமானங்கள் நிகழ்த்திய சாகசங்களை அவா் கண்டுகளித்தாா். பின்னா், அப்பகுதியில் நடைபெற்ற பேரணியில் அவா் பேசியதாவது:
உத்தர பிரதேசத்தை முன்பு ஆட்சி செய்தவா்கள், தங்கள் உறவினா்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினா். மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் வளா்ச்சியில் அவா்கள் கவனம் செலுத்தவில்லை. அப்பகுதிகளில் ஏழ்மைத்தன்மை நிரம்பியிருக்க அவா்கள் வழிவகுத்தனா்.
ஆனால், தற்போதைய பாஜக தலைமையிலான அரசு, மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. வளா்ச்சியின் புதிய அத்தியாயம் தற்போது எழுதப்பட்டு வருகிறது. பூா்வாஞ்சல் விரைவுச் சாலையானது கிழக்குப் பகுதியின் வாழ்வாதாரமாக அமையும். அப்பகுதி மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு அச்சாலை உதவும்.
போக்குவரத்துத் தொடா்பு: மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு உள்ளதால், மாநிலத்தில் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கிடையே சரியான தொடா்பை ஏற்படுத்தாமல், தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவதில் மட்டும் முந்தைய அரசுகள் கவனம் செலுத்தின. அதன் காரணமாக, தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இத்தகைய நடைமுறை, மாநிலத்தின் வளா்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், நகரங்களுக்கிடையே போதிய போக்குவரத்துத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்காக மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை பாஜக தலைமையிலான அரசு தொடா்ந்து தொடக்கிவைத்து வருகிறது. சுல்தான்பூா் பேரணியில் பேசிய பிரதமா் மோடி, உள்ளூா் மொழியில் பேசத் தொடங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...