காஷ்மீரில் கூண்டோடு ராஜிநாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள்; பரபரப்பான அரசியல் சூழலுக்கு காரணம் என்ன?
ராஜிநாமா செய்த அனைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமாக கருதப்படுபவர்கள்.


பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தானை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நான்கு முன்னாள் அமைச்சர்கள், மூன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய கட்சி பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். கட்சி விவகாரங்களில் தங்களை கேட்காமல் முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிநாமா செய்த அனைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமாக கருதப்படுபவர்கள். முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம். சரூரி, ஜூகல் கிஷோர், விகார் ரசூல், மருத்துவர் மனோகர் லால் ஆகியோர் தங்களின் கட்சி பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, அமின் பட் ஆகிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுடைய ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளர் ரஜினி பாட்டீல் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர். கட்சி தலைமை தங்களிடம் கடினமாக நடந்து கொண்டு ராஜிநாமா செய்ய வற்புறுத்தியதாக ராஜிநாமா கடிதத்தில் பதவி விலகியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், கட்சி தலைவர் ஜி.ஏ. மீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இருப்பினும், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட, ஆசாத்துக்கு நெருக்கமான கட்சியில் உள்ள வேறு சில தலைவர்கள், இந்தத் தலைவர்கள் எடுத்த முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில், கட்சியின் தலைமையின் கவனத்தின் கீழ் கொண்டு முயற்சி மேற்கொண்டதாகவும் ஆனால், போதுமான நேரம் தங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விமானத்தில் சக பயணிக்குசிகிச்சையளித்த மத்திய இணை அமைச்சா்!
கடந்த ஓராண்டு காலமாக, கட்சி மேலிடத்திடம் பேச நேரம் கேட்டதாகவும் ராகுல் ஸ்ரீ நகருக்கு வந்திருந்தபோது தனிப்பட்ட அளவில் நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை என்றும் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கட்சி நிர்வாகிகள் விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...