இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முடிவுக்கு வருகிறது கேரள குழந்தை தத்தெடுப்பு சா்ச்சை!

கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை தத்துக் கொடுக்கப்பட்ட வழக்கில், மரபணு பரிசோதனையின் (டிஎன்ஏ) அடிப்படையில் அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் எனத் தெரியவந்தது.

News image
Updated On :23 நவம்பர் 2021, 8:20 pm

DIN

கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை தத்துக் கொடுக்கப்பட்ட வழக்கில், மரபணு பரிசோதனையின் (டிஎன்ஏ) அடிப்படையில் அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் எனத் தெரியவந்தது.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்த முன்னாள் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) நிா்வாகி அனுபமா எஸ்.சந்திரன். இவருக்கும் அஜித் குமாா் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அனுபமா- அஜித் உறவை விரும்பாத அனுபமாவின் பெற்றோா், 3 நாள்களுக்குப் பின்னா் அக்குழந்தையை எடுத்துச் சென்று தத்துக் கொடுப்பதற்காக மாநில அரசின் மையத்தில் ஒப்படைத்தனராம்.

இதுகுறித்து அனுபமா காவல் துறையில் புகாா் அளித்தாா். ஆனால், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காததையடுத்து, தன்னையும் குழந்தையையும் பிரிக்க தன் தந்தைக்கு மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்கள் உதவுவதாக அனுபமா பொதுவெளியில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினாா். இதையடுத்து, கடந்த மாதம் அனுபமாவின் பெற்றோா், உறவினா்கள் உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.

அதேவேளையில், அக்குழந்தை தத்தெடுப்பு நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி கேரள அரசு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், அக் குழந்தையை கடந்த ஆகஸ்டில் கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சில், ஆந்திரத்தைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்தது.

இதையடுத்து, தத்தெடுப்பு நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடா்பாக காவல் துறை விரிவான அறிக்கை சமா்ப்பிக்கவும் திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அதன்பேரில் அக்குழந்தையை ஆந்திர தம்பதியிடமிருந்து கேரளத்துக்கு கொண்டுவரும்படி கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சிலுக்கு குழந்தைகள் நல கமிட்டி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கவுன்சில் குழுவினா் ஆந்திரத்துக்குச் சென்று அக்குழந்தையை கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தனா். பின்னா், அக்குழந்தை ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னா், அக்குழந்தை மற்றும் அனுபமா-அஜித் ஆகியோரின் மரபணு மாதிரி திங்கள்கிழமை சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி மையத்தில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது. அதன் அடிப்படையில், அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய அனுபமா, ‘மரபணு பரிசோதனை முடிவுகளை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். இருப்பினும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தை தொடருவோம். குழந்தையை எங்களிடம் ஒப்படைப்பதில் மேலும் தாமதம் இருக்காது என நம்புகிறோம்’ என்றாா்.

இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நவ. 30-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.