ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா சாலைகளை கத்ரினா கைப்பின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதய்பூர்வதி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ராஜேந்திர சிங் குத்தா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜேந்திர சிங் குத்தாவிடம் அங்கிருந்த மக்கள் சிலர் தங்களது பகுதியில் சாலை வசதிகள் சரிவர இல்லை என புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனது தொகுதியில் சாலைகள் கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தாவின் காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு
சாலையின் தரத்தை நடிகையின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் தொடா்பான அனைத்து ஊடக செய்திகளும் கண்காணிக்கப்படும்: மாவட்ட தோ்தல் அலுவலா்

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரமலான் மாத சிறப்புத் தொழுகை

தியாகராஜநகரில் காா் தீக்கிரை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

