டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாட்டில் புதிதாக 9,119 பேருக்கு தொற்று: 396 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:04 am

DIN


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 396 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 9,119

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,44,882​​​​​​​.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 10,264.
இதுவரை குணமடைந்தோர்: 3,39,67,062.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.33​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 396. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,980.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,09,940. இது கடந்த 538 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,19,38,44,741 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,59,24,763 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 11,50,538 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.