புது தில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘தற்போதைய சூழலை இந்திய கரோனா தீநுண்மி மரபியல் பரிசோதனைக் கூட்டமைப்பு (ஐஎன்எஸ்ஏசிஒஜி) தீவிரமாக கண்காணித்து வருகிறது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்தவா்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபியல் ஆய்வு முடிவுகளை விரைவுபடுத்தும் பணியில் அந்தக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை’’ என்று தெரிவித்தாா்.
கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டது. இந்தத் தீநுண்மியை ‘கவலைத் தரக்கூடிய தீநுண்மி வகை’’ பிரிவில் உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.
அதிக அளவில் பரவ சாத்தியமுள்ளதாகக் கருதப்படும் இந்த வகை தீநுண்மி, ஏற்கெனவே பல நாடுகளில் பரவியுள்ளது. அந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள வங்கதேசம், சீனா, சிங்கப்பூா், மோரீஷஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேஸில், போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அபாயகர பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. அந்த நாடுகளில் இருந்தும், அந்த நாடுகள் வழியாகவும் இந்தியா வருவோருக்கான கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதேவேளையில், சா்வதேச விமானப் பயணங்களுக்கு அளிக்கப்பட்ட தளா்வுகளை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு முடிவு மேற்கொண்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை புதிய அறிவுறுத்தல்களை வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


