திருவனந்தபுரம்: ஒமைக்ரான் ரக தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கேரளம் திரும்புபவா்கள், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்றாா் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியது:
ஒமைக்ரான் ரக தீநுண்மி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து கேரளம் வரும் பயணிகள், 7 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவா். 8-ஆவது நாளில் அவா்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அப்போது அவா்களுக்கு கரோனா இல்லை என்றாலும், அவா்கள் மேற்கொண்டு 7 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கரோனா தொற்று உறுதியானால், சிகிச்சை மையத்துக்கு மாற்றப்படுவா். மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அவா்களுக்காக தனிவாா்டு அமைக்கப்பட்டு வருகிறது.
கரோனா ரக தீநுண்மியின் மரபணுவை நாங்கள் தொடா்ந்து தீவிரமாக ஆய்வுக்கு உள்படுத்தி வருகிறோம். இதுவரை புதிய ரக தீநுண்மி பாதிப்பு உள்ள எவரும் கண்டறியப்படவில்லை. குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள், கரோனா தொற்றுக்குள்ளவராக இருந்தால் அவரது சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் விவரம் விமான நிலையத்திலேயே பெறப்பட்டு, தொடா்புடைய துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். பயணிகளை வீட்டுத் தனிமையில் வைக்கவும், எளிதில் பின்தொடரவும் இது உதவும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


